கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
X

உயிருடன் மீட்கப்பட்ட மாடு.

கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

கம்பைநல்லூர்அருகே உள்ள வி.பள்ளிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி முனியப்பன் வேலு என்பவரது சுமார் 90அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில், மாடு ஒன்று விழுந்தது. இதுகுறித்து அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் குழுவினருடன் விரைந்து சென்று சுமார் ஒருமணி நேரம் போராடி மாடு உயிருடன் எவ்விதகாயமும் இன்றி மீட்கப்பட்டது. பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாட்டின் மதிப்பு ரூ. 40,000/- ஆகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!