அரூர் கூட்டுறவு சங்கத்தில் 2450 மூட்டை பருத்தி ரூ.62 லட்சத்திற்கு ஏலம்

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 2450 மூட்டை பருத்தி ரூ.62 இலட்சத்திற்கு ஏலம் போனது.

தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட்ள் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.

இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 282 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 282 விவசாயிகள் எடுத்து வந்த 2450 பருத்தி மூட்டை ரூ.62 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், வர லட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.6700 முதல் ரூ.7779 வரையில் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, விவசாயிகள், பருத்தி வாரத்து குறைந்து. ஆனால் விற்று கூடுதலாக விற்பனையானது. கடந்த வாரம் 3200 மூட்டை பருத்தி ரூ. 65 இலட்சத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று 2450 மூட்டை பருத்தி ரூ.62 இலட்சத்திற்கு ஏலம் போனது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு