அரூர் பகுதியில் பேனர் வைக்க கட்டுப்பாடு: ஆர்டிஓ தலைமையில் ஆலோசனை கூட்டம்

அரூர் பகுதியில் பேனர் வைக்க கட்டுப்பாடு: ஆர்டிஓ தலைமையில் ஆலோசனை கூட்டம்
X

அரூர் பகுதியில் விளம்பர பலகை வைப்பதற்கான கட்டுப்பாடு குறித்து அரசியல் கட்சியினருடன் நடந்த  ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஓ., முத்தையன் பேசுகிறார்.

அரூர் பகுதியில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆர்டிஓ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், அரூர் கோட்டாட்சியர் முத்தையன் தலைமையில் இன்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் வணிகர் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் தற்போது உள்ள விளம்பர போர்டு இரண்டு நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும். இனி விளம்பர பதாகைகள் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். பிளக்ஸ் போர்டு கடை உரிமையாளர் அச்சிட வருபவர்களிடம் அரசால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ள அளவில் மட்டுமே அச்சிடப்பட்டு கொடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரத்தில் ஸ்டாண்டிங் விளம்பர போர்டு வைக்கக்கூடாது என கோட்டாட்சியர் முத்தையன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் அரூர் தாசில்தார் கணிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil