/* */

அரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பவுர்ணமி நாளில் வீரபத்திரன் சுவாமியை ஊர்வலமாக எடுத்து சென்று, வயல் வெளியில் சுவாமியை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே தலையில் தேங்காய்  உடைத்து பக்தர்கள்  நேர்த்திக்கடன்
X

அரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

அரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

அரூர் அருகே மந்திகுளம்பட்டி கிராமத்தில் குரும்பர் மக்களின் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.இவ்விழாவில் தலையில் தேங்காய் உடைத்து ஆண், பெண் பக்தர்கள் வினோத வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மந்திகுளம்பட்டி கிராமத்தில் குரும்பர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூக மக்களின் குல தெய்வமான வீரபத்திரசுாவமி கோயில் திருவிழா, ஆண்டு தோறும் ஆடி பெருக்கு தினத்தில் தொடங்கி பவுர்ணமி வரை பல்வேறு கிராமங்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி, குல தெய்வமான வீரபத்திர சுவாமியை வழிபடுவது வழக்கம். தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது.இதில் ஆண்கள், பெண்கள் என பலர் கையில் மஞ்சள் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர். தொடர்ந்து இன்று பவுர்ணமி நாளில் வீரபத்திரன் சுவாமி ஊர்வலமாக எடுத்து சென்று, வயல் வெளியில் சுவாமியை வைத்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.

இதனை தொடர்ந்து, சக்தி அழைத்து, அருள் வந்தாடும் பக்தர்களுக்கு, வீரபத்திரா என முழங்கி ஆரவாரம் செய்து, பரம்பரை பூசாரிகள் தலையில் தேங்காய் உடைத்தனர். தொடர்ந்து இந்த திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தலையில் தேங்காய் உடைத்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

பின்னர். சாமிக்கு சிறப்பு அலங்காரமும் பூஜையும் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறும் குரும்பர் இன மக்களின் பாரம்பரிய வீரபத்திரன் சாமி திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாட்டினை காண, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் திருவிழாவுக்கு வந்து, சாமி தரிசனம் செய்தனர்.


Updated On: 22 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.