அரூரில் கடை வாடகை தகராறில் மோதல்: 4 பேருக்கு போலீசார் வலை

அரூரில் கடை வாடகை தகராறில் மோதல்: 4 பேருக்கு போலீசார் வலை
X
அரூரில் கடை வாடகை தொடர்பான மோதல் விவகாரத்தில், 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், அரூர், கீழ்பாட்சாபேட்டையை சேர்ந்தவர் நாகராஜன், 42. இவருக்கு சொந்தமான கடையை குபேந்திரன் நகரை சேர்ந்த சுரேஷ்பாபு, 45, என்பவருக்கு கடந்த, 2019 ஜனவரி முதல், வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், வாடகை பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த, 26ல் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். நாகராஜன் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய இருவரும் தனித்தனியாக அரூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, சுரேஷ்பாபு அவரது நன்பர் ஹரிஷ், 23 , நாகராஜன், அவரது மனைவி தேன்மொழி ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!