பள்ளி வளாகம் அருகே கஞ்சா, மது விற்பனை: ஊராட்சித் தலைவர் புகார்
பைல் படம்.
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த வேப்பம்பட்டியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து வேப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பி.சென்னகிருஷ்ணன், அரூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், அரூர் வட்டம், வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 450 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளிக்கு ஈட்டியம்பட்டி, முத்தானூர், வீரப்பநாய்க்கன்பட்டி, வெளாம்பட்டி, பூதிநத்தம், மல்லூத்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி வளாகம் அருகில் கஞ்சா மற்றும் மதுபுட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் பள்ளி மாணவிகள் செல்லும்போது, மதுபோதையில் சிலர் கேலி, கிண்டல் செய்கின்றனர். எனவே வேப்பம்பட்டியில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை காவல் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவரது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu