வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து: கம்பை நல்லூரில் பாமக ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து: கம்பை நல்லூரில் பாமக ஆர்ப்பாட்டம்
X

தர்மபுரி மாவட்டம், கம்பை நல்லூர் பஸ் ஸ்டாண்டில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் கம்பை நல்லூரில் பாமக.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்தது.இதனை கண்டித்து தருமபுரி மாவட்டம்,கம்பைநல்லூரில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில உழவர் பேரியக்க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இல.வேலுச்சாமி தலைமை வகித்தார்.

மாநில வன்னியர் சங்க செயலாளர் இரா.அரசாங்கம், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி. வி.செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னசாமி ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அம்பிகா கிருஷ்ணமூர்த்தி, ராஜாலிங்கம், நாராயணன்,புழுதிகரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜாலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாசின் நேர்முக உதவியாளர் சொல்லின் செல்வர், மாநில பாட்டாளி மாணவர் சங்க துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் மாயக்கண்ணன், ஒன்றிய செயலாளர் பசவராஜ், சேட்டு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!