அரூர் பஸ் நிலையத்தில் தவித்த சிறுவன்: 2 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பு

அரூர் பஸ் நிலையத்தில் தவித்த சிறுவன்:  2 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பு
X

பெற்றோருடன் பேருந்துநிலையத்தில் தவித்த குழந்தை.

அரூர் பேருந்து நிலையத்தில் 3 வயது சிறுவன் தவிப்பு - காவல்துறை பாதுகாத்து இரண்டு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பு.

`கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பு, வசந்தா தம்பதியினரின் மூன்று வயது குழந்தை சபரி. கோயமுத்தூரில் கூலி வேலை செய்து விட்டு பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு திரும்பிய வசந்தா மற்றும் அவரின் தாய், தந்தை ஆகியோர் பேருந்து மூலமாக அரூர் வந்துள்ளனர்.

பின்னர் தனியார் பேருந்து மூலம் ஆண்டியூர் கிராமத்திற்கு சென்று பேருந்தைவிட்டு இறங்கும்போது, சிறுவன் சபரி காணவில்லை என தெரியவந்தது.

இதனையடுத்து பேருந்து நிலையத்தில் தவறவிடப்பட்ட சிறுவன் சபரி சுமார் 2 மணி நேரமாக கண்ணீர் மல்க அழுத சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அதிவிரைவு படை குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தைக்கு பாதுகாப்பு அளித்த அதிவிரைவு படை குழுவினர் சுமார் 2 மணி நேரத்தில் பெற்றோர்களை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர். அதிவிரைவு படை குழுவினர்க்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Next Story