தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் முறைகேடு: பஞ்., தலைவருடன் வாக்குவாதம்
தீர்த்தமலை பஞ்சாயத்துத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பிரசித்தி பெற்ற தீர்த்தமலை அடிவாரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இறுதியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலம் இன்று வரை நடைபெறாமலே இருந்து வருகிறது.
இந்த வருடத்திற்கான ஏலம் கடந்த ஆறு மாதங்களாக நான்கு முறை அறிவிக்கப்பட்டு பின்பு அது கைவிடப்பட்டு வருகிறது. இதற்க்கு காரணம் தீர்த்தமலை பஞ்சாயத்து தலைவரின் நெருக்கமானவர்களுக்கு இந்த ஏலம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் தட்டிக் கழித்து வருகின்றார்கள். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் துணை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விடப்படும் என்று ஒரு வாரத்திற்க்கு முன்பே துண்டறிக்கைகள் மக்களிடையே கொடுக்கப்பட்டதால் தீர்த்தமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏலம் எடுப்பதற்காக பொதுமக்கள் வந்தனர்.
அப்போது கிராமசபை கூட்டம் நடைபெற்றிருப்பதை பார்த்த பொதுமக்கள் தலைவரிடம் கேட்கும்போது, தலைவர் இன்றும் ஏலம் விடப் படுவதில்லை என்று சொன்னவுடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் பொதுமக்கள் பார்வையில் பொது ஏலம் விடப்படும் என்று வாக்குறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu