அரூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ரூ.45 லட்சத்திற்கு விற்பனை
அரூர் கூட்டுறவு சங்கத்தில், மஞ்சள் எடை போடும் பணியில் தொழிலாளர்கள்.
தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் பருத்தி ஏலமும், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் ஏலமும் நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் அரூர் பகுதியில் உள்ள அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய மஞ்சள் மற்றும் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், 1000 மூட்டை மஞ்சளை எலத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், குண்டு மஞ்சள் குவிண்டால் ரூ.5809 முதல் 6999 வரையும், விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.6042 முதல் 7893 வரை விற்பனையானது. நேற்றைய ஏலத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 1000 மூட்டை மஞ்சள் ரூ.45 லட்சத்திற்கு விற்பனை ஆனது. கடந்த வார்த்தை விட, இந்த வாரம் விவசாயிகள் மற்றும் மஞ்சள் வரத்து குறைந்தது. மேலும் மஞ்சள் விலையும் குறைந்துள்ளது. மேலும் வரும் நாட்களில், மஞ்சள் வரத்தும், விலையும் குறைய வாய்ப்புள்ளது என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu