அரூரில் அமமுக வேட்பாளர்கள் அதிமுகவில் ஐக்கியம்

அரூரில் அமமுக வேட்பாளர்கள் அதிமுகவில் ஐக்கியம்
X

அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்கள். 

அரூரில் அமமுக வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்தார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில், திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவினர் தங்களது ஓட்டுக்கள் உதிர்வதை தடுக்கும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த கமலேஷ் பாபு என்பவர் முன்னாள் அமைச்சரும் தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளர் அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலர்க்கொடி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் 8, 10 மற்றும் 15 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த மலர்கொடி, மஞ்சுளா, ரஞ்சித் குமார் ஆகியோர் தங்களது மனுவை வாபஸ் பெற்றதுடன் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் .அப்போது தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!