அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட கோரிக்கை

அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட கோரிக்கை
X

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள திரையரங்கு.

அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட பாமக நிறுவனர் ராமதாசுக்கு ரசிகர்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள டிஎன்சி திரையரங்கில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் காலைக் காட்சிகள் வெளியிடப்பட இருந்தது.

இந்த நிலையில் பாமகவினர் திரைப்படத்தை அருகில் உள்ள திரையரங்குகளில் திரையிடக் கூடாது என இரு தினங்களுக்கு முன்பு அரூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். இதன் விளைவாக அரூரில் உள்ள டி என் சி திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன .

எனவே இத்திரையரங்குகளில் காலை காட்சிகளை வெளியிடக் கோரி சூர்யா நற்பணி இயக்க ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு தமிழக அரசுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!