ஆரூர் பள்ளியில் 11 லட்சத்தில் சுகாதார வளாகம் : எம்பி செந்தில்குமார் திறப்பு

ஆரூர் பள்ளியில் 11 லட்சத்தில் சுகாதார வளாகம் : எம்பி செந்தில்குமார் திறப்பு
X

தருமபுரி மாவட்டம், அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார வளாகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம், அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார வளாகத்தை எம்பி செந்தில்குமார் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 11 இலட்சம்ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிவறை கடந்த சில மாதங்களுக்கு முன், மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்காக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வந்திருந்தார்.

ஆனால் பணி முழுமையாக முடியாததால், அதனை பயன்பாட்டிற்கு திறக்காமல், ஒப்பந்ததாரரை அழைத்து விரைந்து முடிக்க சொல்லி அறிவுறுத்தி விட்டு சென்றார். தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்ததால், இன்று நவீன் கழிப்பறையை மாணவிகளின் பயன்பாட்டிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்த பிறகு பள்ளிக் கல்வி இடை நிற்றல் அதிகரிப்பதற்கு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது காரணமாக அமைந்துள்ளது. எனவே இடைநிற்றலை தவிர்க்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டு வருவதாக செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!