அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
X

குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவன் லோகேஷ்.

அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் லோகேஷ் (வயது 15). தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தன்னுடைய நண்பர்களுடன் லோகேஷ் குளிக்க சென்றான். மழையின் காரணமாக குட்டையில் தண்ணீர் அதிகமாக இருந்தது.

நண்பர்களுடன் சென்ற ஆர்வம் மிகுதியால் குட்டையில் இறங்கி லோகேஷ் குளிக்க முயன்றான். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!