அரூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது

அரூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது
X
பைல் படம்
அரூர் உட்கோட்ட பகுதிகளில் மது விற்பனை செய்த ஏழு பெண்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியின்போது மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஏழு பெண்கள் உட்பட பத்து பேரை கைது செய்தனர்.

அரூர் அடுத்த அச்சல்வாடியில் மது விற்றதாக கலா, (41) அம்பிகா, (45), மோகன்ராஜ், (29), ஆகிய மூன்று பேரை அரூர் போலீசார் கைது செய்தனர்.

அதே போல், தென்கரைகோட்டையில் மது விற்ற செல்வி, (47)ராஜா, (55,) கோபிநாதம்பட்டி சாந்தி, (70)செல்வி, (65,) கொக்கராப்பட்டி கலா, (64,) ஆத்துார் சுகுமார், (33,) குருபரஹள்ளி லோகம்மாள், (50,) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 639 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது