புத்தக திருவிழா ரூ. 2 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை
காட்சி படம்
அரூரில் நடைபெற்ற 2 நாள் புத்தக திருவிழாவில், சுமார் 22,000 புத்தகங்கள் ரூ.2.10 இலட்சத்திற்கு விற்பனை ஆனது.
தருமபுரி புத்தக பேரவை சார்பில் புத்தக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடை உத்தரவால் புத்தக திருவிழா நடைபெறவில்லை. மேலும் பொதுமக்கள் மற்றும் வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று தகடூர் புத்தகப் பேரவை, அழகு அரூர் அமைப்பு மற்றும் அரிமா சங்கம் சார்பில் இன்று வர்ண தீர்த்தம் அரசு பள்ளியில் 2 நாள் புத்தகத் திருவிழா நடைபெற்றது.
இதில் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள், போட்டித் தேர்வு புத்தகங்கள் சமையல் புத்தகங்கள், தலைவர்கள் வரலாறு, உலக வரலாறு போன்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியிலிருந்து பெரியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் புத்தகம் வாங்கி சென்றனர். இதில் வாசகர் கூட்டம் எதிர் பார்த்தை விட அதிகமாக வந்தது. மேலும் இரண்டு நாள் புத்தக கண்காட்சியில் சுமார் 22,000 புத்தகங்கள், ரூ.2.10 இலடச்த்திற்கு விற்பனையானது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக திங்கள், செவ்வாய்கிழமைகளில் பாப்பிரெட்டிப்பட்டியில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu