ரூ.9.70 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அதிரடி.!

ரூ.9.70 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அதிரடி.!
X
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலை, கடகத்தூர் அரசு ஐடிஐ அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் பாலக்கோடு அருகே தனியார் பால் பண்ணை ஊழியர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.9.70 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், பறிமுதல் செய்த பணத்தை தருமபுரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதாப்பிடம் ஒப்படைத்தனர். அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார். இதே போன்று தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story