தர்மபுரி மாவட்டத்தில் இளநிலை, முதுநிலை அரசு தட்டச்சு தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில்  இளநிலை, முதுநிலை அரசு தட்டச்சு தேர்வு
X

தட்டச்சு தேர்வு (கோப்புப்படம்)

தர்மபுரி மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற இளநிலை, முதுநிலை அரசு தட்டச்சு தேர்வில் 4000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இளநிலை, முதுநிலை அரசு தட்டச்சு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் நடைபெற வேண்டிய தேர்வு மார்ச் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி, தர்மபுரி எஸ்.எம் ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரி, சவுளூர் லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரி, பைசுஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சாமியாபுரம் கூட்ரோடு ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 6 மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இளநிலை, முதுநிலை அரசு தட்டச்சு தேர்வுகள் நடைபெற்றது.

தட்டச்சு பள்ளிகள் சார்பில் ஏற்கனவே தட்டச்சு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மையங்களில் நடைபெற்ற தட்டச்சு தேர்வுகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் அறை கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டனர்.

மாவட்டம் முழுவதும் காலை, மாலை என பல்வேறு பிரிவுகளாக நேர அடிப்படையில் நடைபெற்ற இந்த தட்டச்சு தேர்வில் மொத்தம் 4000 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட வணிகவியல் தட்டச்சுப் பள்ளிகள் சங்க தலைவர் ஹரிகரன், செயலாளர் மாதையன், பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இந்த அரசு தட்டச்சு தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் வெளியிடப்படுகிறது.

Tags

Next Story
the future with ai