வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டம் பாயும்: வன அலுவலர் எச்சரிக்கை

வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டம் பாயும்: வன அலுவலர் எச்சரிக்கை
X

மின்வேலி - கோப்புப்படம் 

விவசாய வயல்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட வன அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தர்மபுரி மாவட்டம், தீர்த்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராம்குமார், கவுரன் ஆகியோர் வயலில் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி உயிரிழந்தது. இதுதொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வனத்துறை, வருவாய்துறை மற்றும் மின்சார துறை அலுவலர்கள் இணைந்து ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். விவசாய வயல்களில் மனிதர்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு மின்வாரியத்தால் துண்டிக்கப்படும்.

வனவிலங்குகளை வேட்டையாடுதல், வன விலங்குகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்

Tags

Next Story
ai marketing future