காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை விறுவிறு

காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை விறுவிறு
X

காரிமங்கலம் ஆட்டு சந்தை 

கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்

தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. காரிமங்கலம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தீபாவளி பண்டிகையன்று புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து கோவிலுக்கு சென்று வழிபாட்டு செய்வது வழக்கம். அதனை தொடர்ந்து ஆடுகளை பலியிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கறி விருந்து நடைபெறும்.

அதற்காக வியாபாரிகள், கறி கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி கிராமத்து மக்களும் அதிக அளவில் ஆடுகள் மற்றும் கோழி வாங்கி சென்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள், கோழி விற்பனை களை கட்டியது. இன்று கூடிய சந்தையில் ஆடுகளை வாங்க கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.

வழக்கத்தை விட இந்த வாரம் கூடிய ஆட்டு சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. கிராம மக்கள் குழுவாக சேர்ந்து ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

காரிமங்கலம் பகுதியில் தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

கடந்த வாரம் 10, 15 கிலோ கொண்ட ஆடு 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!