உணவுப்பொருள் கலப்படம் : நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு

உணவுப்பொருள் கலப்படம் : நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு
X

உணவு பாதுகாப்பு குறித்து  நடமாடும் பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 

உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பொருள்களில் கலப்படம், உணவு பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கோபி உள்ளிட்டோர் குழுவாக சென்று காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர்.

இதில் காரிமங்கலம் அரசு மகளிர் அறிவியல் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை பேராசிரியர் செந்தில்குமார், தமிழ் துறை பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் கவுரவ விரிவுரையாளர் தனலட்சுமி, கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் கல்லூரி மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன் உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்து விளக்கம் அளித்தனர்.

மேலும் நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை முன் நிறுத்தி உணவுப் பொருட்களை களத்திலேயே ஆய்வு செய்து கலப்படத்தை கண்டறிய வசதிகள் உள்ளன.

வாகனத்தில் உள்ள ஆய்வக பரிசோதனை மூலம் உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை மேற் கொண்டு தரமான பொருட்கள் நுகர்வோரை சென்றடைய முயற்சி மேற்கொள்ளும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.

Tags

Next Story
சிக்கன் , மட்டன் எதுக்கு...? கால் கிலோ சுண்டல் போதுமே..! அந்த ரகசியம் தெரியுமா...?