/* */

கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை திடீர் உயர்வு

600 ரூபாய்க்கு விற்ற சன்னமல்லி இன்று கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமந்திப்பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை திடீர் உயர்வு
X

தர்மபுரி மலர் சந்தை 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ சந்தையில் விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில், கோவை, திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் தர்மபுரி சந்தைக்கு வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் சாமந்திப் பூக்களை கொள்முதல் செய்வது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை அதிகரிப்பால் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை காலங்களில் வழக்கமாக பூக்கள் விலை உயரும். இது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. சாதாரண நாட்களை விட பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு இருக்கும். இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பண்டிகை போன்ற காலங்களை எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இன்று அதிகரித்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ இன்று கிலோ 80 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

நேற்று வரை ஒரு கிலோ சன்னமல்லி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் குண்டுமல்லி 800 ரூபாய்க்கு நேற்று விற்பனையான நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கனகாம்பரம் நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி ஆகிய பூக்களின் விலையும் நேற்றை விட இன்று விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 25 Nov 2023 4:12 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்