போதிய விலை கிடைக்காததால் சாமந்தி பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்

போதிய விலை கிடைக்காததால் சாமந்தி பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காததால் சாமந்தி பூக்களை ரோட்டோரம் கொட்டி விவசாயிகள் கொட்டி சென்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்களை தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த புரட்டாசி மாதம் பூக்களின் விலை குறைந்து படு வீழ்ச்சியில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விஜயதசமி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து கிலோ சாமந்திப்பூ ரூ. 200க்கும் செண்டுமல்லி ரூ .50 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தற்பொழுது பூக்களின் வரத்து அதிகரிப்பால் சாமந்தி, செண்டுமல்லி பூக்கள் கிலோ ரூ. 5 முதல் முதல் ரூ. 10க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பூக்களை வாங்க வியாபாரிகள் வராததால் விற்பனை ஆகாத பூக்களை விவசாயிகள் ரோடு ஓரங்களில் கொட்டி செல்கின்றனர்.

தர்மபுரி பென்னாகரம் ரோட்டில் இருந்து சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலை ஓரத்தில் சாமந்தி மற்றும் செண்டு மல்லி பூக்களை விவசாயிகள் கொட்டி சென்றுள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்