தர்மபுரி ரயில் நிலையங்களில் தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

தர்மபுரி ரயில் நிலையங்களில் தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
X

 பெங்களுரு தென் மேற்கு ரயில்வே கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் 

பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் போன்றவற்றை தென்மேற்கு கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்ட தென் மேற்கு ரயில்வே துறை சார்பில் தர்மபுரி, சிவாடி, தொப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் நவீன வசதிகள் குறித்து பெங்களுரு தென் மேற்கு ரயில்வே கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மேற்கண்ட ரயில் நிலையங்களில் உள்ள நடை மேடைகள், பயணிகள் அறை, டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அப்போது ரயில் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குறிப்பாக தர்மபுரி ரயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

தர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது ரயில்வே துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story