தருமபுரியில் 14ம் தேதி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

தருமபுரியில் 14ம் தேதி மாணவ, மாணவியர்களுக்கு  மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி
X

பைல் படம்.

தருமபுரியில் 14ம் தேதி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

தருமபுரியில் உள்ள அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் நேரு பிறந்தநாளையொட்டி, வரும் 14ம் தேதி (திங்கட் கிழை) மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளபடி, நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. |

இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி வருகின்ற நவம்பர் 14ஆம் நாள் (14.11.2022) கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் அன்று முற்பகல் 09.30 மணிக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகின்றது. போட்டி நாளன்று மாணவ மாணவியர்கள் தங்கள் வருகையை 0900 மணியளவில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பப்படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ. 3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும், மேலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ. 2000/விதம் வழங்கப்பெறவுள்ளது.

இந்தப்போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் 6 தலைப்புகளும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் 6 தலைப்புகளும் கொடுக்கப்படும்.

ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்:

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தலைப்புகள்

1. குழந்தைகள் தின விழா

2. ரோசாவின் ராசா

3. ஜவகர்லால் நேருவின் தியாகங்கள்

4. நூல்களைப் போற்றிய நேரு

5. அண்ண ல் காந்தியின் வழியில் நேரு

6. இளைஞரின் வழிகாட்டி நேரு

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான தலைப்புகள்

1.இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு

2. நேரு கட்டமைத்த இந்தியா

3. காந்தியும் நேருவும்

4. நேருவின் பஞ்சசீலக் கொள்கை

5. உலக அமைதிக்கு நேருவின் தொண்டு

6. அமைதிப்புறா நேரு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!