தர்மபுரியில் சிறார்,சிறுமிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி

தர்மபுரியில் சிறார்,சிறுமிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி
X
சிறார் சிறுமிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி தர்மபுரி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

சேலம் சரகத்தில் மொத்தம் 41 காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் உள்ளன. இதில் 1372 சிறுமி மற்றும் சிறார்கள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் துவங்கப்பட்டு ஒவ்வொரு சிறுமி மற்றும் சிறார் மன்றத்திற்கும் ஆண்டிற்கு ரூ.66,000 வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை ரூ.75,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் கொரோனா காலத்தில் இந்த மன்றங்களுக்கான முழு பலனைபெற இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் சிறார் மன்றத்தை புதுபிக்கும் வகையில் தர்மபுரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் சிறார் சிறுமிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி தர்மபுரி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஷ்வரி கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 சிறுமி மற்றும் சிறார் மன்றங்களில் உள்ள 282 மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகளின் போது அணிந்து கொள்ள ஏதுவாக டி-ஷர்ட், பள்ளிக்கு புத்தகம் கொண்டு செல்லும் பைகள் ஆகியவைகளை தனியார் பங்களிப்பளிப்புடன் வழங்கினார்.

மேலும் விளையாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் ஆங்கிலப் புலமை போன்ற பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் 41 சிறார் மன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டன. சுகாதார முகாம் மற்றும் தோல் சிகிச்சை தவிர பொங்கல்விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும் இச்சிறார் மற்றும் சிறுமியர் மன்ற புதுப்பித்தலுக்கு உறுதுணையாக இருந்த குழுவினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஷ்வரி இதன் மூலம் மிகவும் நலிவடைந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிறார்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடாமல் கல்வி மற்றும் முன்னேற்றத்தின் மீது நாட்டத்தை செலுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி வரப்படுகிறது. இதனால் சமூக சிந்தனையையும், நல்ல குடிமக்களுக்கான தகுதியையும் குழந்தை பருவத்திலேயே வளர்த்தெடுக்க முன்னுரிமை கொடுத்து சேலம் சரகத்தில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....