தர்மபுரி நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு

தர்மபுரி நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு
X

பைல் படம்.

தர்மபுரி நகராட்சியில் ரூ.2.12 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி நகராட்சி பகுதியில் 2021-2022-ம் ஆண்டிற்கான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. 10-வது வார்டு டி.என்.வி. நகர், 32-வது வார்டு அன்னசாகரம் தண்டுபாதை தெருவில் கழிப்பறை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணி ஆகியவை நடக்கிறது.

இந்த பணிகளை சேலம் மண்டல செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். தரமான சாலை அமைக்கப்படுகிறதா என சோதனை செய்த அவர் இந்தத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், வரைவாளர் தவமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்