கலெக்டர் அலுவலக மாடியில் நின்று குதிப்பேன் என தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

கலெக்டர் அலுவலக மாடியில் நின்று குதிப்பேன் என தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் மோகனா.

போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலக மாடியில் நின்று குதிப்பேன் என தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் வயது 33. இவர் கடந்த 2008 -2009 ஆண்டில் தமிழக இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வு எழுதியுள்ளார். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் சாதி ரீதியான கட்ஆப் மதிப்பெண் வரும்பொழுது, அதில் வேடியப்பன் பெயர் இடம்பெறவில்லை.

இதனால் தனது மதிப்பெண் சான்றிதழ், தான் எழுதிய ஓஎம்ஆர் நகல் கேட்டு தமிழக காவல்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினார். அந்த மனுவில் எந்தவித பதிலும் வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்தும் கிடைக்காத காரணத்தினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கும் பொழுது, 2007ஆம் ஆண்டு தேர்வு எழுதிய நகல் கொடுக்கபட்டதாகவும், அப்பொழுது அவர் தேர்வு எழுதவில்லை என்றும், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக 2008- 2009 இல் இவர் எழுதிய அந்த மதிப்பெண்ணில் கார்த்திக் என்பவர் முறைகேடாக பணியில் இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும், ஆகவே சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றிய டிஎஸ்பி ரெஜினா பேகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவலர் தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனறும் வேடியப்பன் மனைவி மோகனா வயது 21. இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல்மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து தன்னை காப்பாற்ற யாராவது வந்தால் குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கினர். கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!