தருமபுரியில் தன்னார்வ பாதுகாப்பு நுகர்வோர் ஆலோசனைக் கூட்டம்
தருமபுரியில் தன்னார்வ பாதுகாப்பு நுகர்வோர் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்புக் குழு ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்ஷினி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக நுகர்வோர்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நுகர்வோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். நுகர்வோர் அமைப்பில் உள்ள நபர்கள் லாப நோக்கம் அல்லாமல் சுயநலமின்றி பொதுநல நோக்குடன் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பதையும், அனைத்துப் பொருட்களும் தங்குதடையின்றி கிடைக்கின்றதா? என்பதை பற்றியும் கண்காணித்து குறைகள் ஏதேனும் இருப்பின் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
சாதி, சமய கோட்பாடு, பாலினம் மற்றும் மதம் போன்ற எவ்வித பாகுபாடின்றி பொதுநல நோக்குடன் நுகர்வோர்களுக்கு, நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள் சேவையாற்ற வேண்டும். நுகர்வோர் அமைப்புகளுக்குள் வரையறைகளை பின்பற்றி நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த சேவைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அரசு திட்டங்களின் செயலாக்கத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளித்து ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
மேலும், தன்னார்வ நுகர்வோர் குழு கூட்டத்தில் பொது விநியோக திட்டம் தொடர்பாகவும், நுகர்வோர் நலன், பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர்களுக்கு தேவையான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட வருகின்றது. தன்னார்வ குழுக் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அம்மனுக்களின் பேரில் தீர்வுக்கான மேற்க்கொண்ட நடவடிக்கையின் விவரத்தை 15 நாட்களில் சம்பந்தப்பட்ட மனுதாருக்கும் அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தர்மபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன்அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சு.இராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா, உதவி ஆணையர் (கலால்) தணிகாச்சலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வி.கே.சாந்தி, உதவி இயக்குநர் ஊராட்சி சீனிவாச சேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu