கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
இது குறித்து, தர்மபுரி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையரின் உத்தரவின்படி, கட்டுமான தொழிலாளர்களின் உடல் நலத்தை பாதுகாக்க அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பதிவு பெற்ற மற்றும் வெளிமாநில கட்டுமான தொழிலாளர்களுக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.
இந்த தடுப்பூசி போடும் பணியினை மேற்கொள்ள, தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று (புதன்கிழமை) நல்லம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாளை (வியாழக்கிழமை) பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதேபோல், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும், வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu