தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்
X

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்.

தர்மபுரியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி லட்சுமி நாராயணா திருமண மகாலில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், மாநில தலைவர் சுரேஷ் அவர்கள் தலைமையில், மாநில செயலாளர் பரமசிவம், மாநில பிரச்சார செயலாளர் ஜார்ஜ், தர்மபுரி மாவட்ட தலைவர் நந்தகோபால், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில சங்க ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் அமைப்பை மேம்படுத்த கல்வித் தகுதியை உயர்த்தவும், தேர்வாணையம் மூலமாக ஒரே கல்வித்தகுதியில், ஒரே தேர்வில் தேர்வு பெற்று, ஒரே துறையில் ஒத்த ஊதிய விகிதத்தோடு பணிநியமனம் பெற்றாலும் இளநிலை உதவியாளரோடு இணையாக இல்லாமல் பதவி உயர்வில் பாரபட்சமுள்ள போக்கை களையவும்.

மக்கள் நலம் கருதி நில உட்பிரிவு பட்டா மாறுதல் கிராம நிர்வாக அலுவலரும் மேற்கொள்ள அரசு பிறப்பித்த ஆணையின்மீது (G.O.No. M.S.173/2020) நில அளவர்களின் சங்கத்தினர் பெற்றுள்ள நீதிமன்ற தடையை ரத்து செய்யவும், பொது தேர்தலில் வாக்கு சாவடி அமைத்தல், சாமியான பந்தல், தேர்தல்கால மதிப்பூதியம் போன்றவை வருவாய்த்துறையை போன்று ஒரு மாத ஊதியமாக கூடுதல் தொகை பெறவும், கருணை அடிப்படையிலான நியமனங்களில் தேக்க நிலையில் உள்ள பணி வரன்முறை தகுதிகாண் பருவம் உரிய காலத்தில் வழங்கப்படவும், மாவட்ட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் தர்மபுரி மாவட்ட பொருளாளர் தீர்த்தகிரி நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil