தர்மபுரியில் தகடூர் புத்தக பேரவை நூல் வெளியீட்டு விழா

தர்மபுரியில் தகடூர் புத்தக பேரவை நூல் வெளியீட்டு விழா
X

தர்மபுரியில் புலவர் செ. கோவிந்தராசு எழுதிய நெல்லிக்கனி வரலாற்றில் அதியமான்கள் நூல் வெளியீட்டு விழா நடந்தது. 

தர்மபுரியில் புலவர் செ. கோவிந்தராசு எழுதிய நெல்லிக்கனி வரலாற்றில் அதியமான்கள் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

தர்மபுரி தனியார் திருமண மண்டபத்தில் தகடூர் வரலாற்றுபேரவை, தகடூர் அதியமான் வரலாற்று சங்கம், அதியமான் ஓய்வூதியர் சங்கம் இணைந்து புலவர் செ. கோவிந்தராசு எழுதிய நெல்லிக்கனி வரலாற்றில் அதியமான்கள் என்ற நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

தகடூர் புத்தக பேரவை செயலாளரும் மாஜி எம்பியுமான இரா. செந்தில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முனைவர் கவியருவி அப்துல் காதர் வெளியிட தர்மபுரி மாதர்சங்க தலைவி சந்திரா ஆதிமூலம் பெற்றுக்கொண்டார்.

தர்மபுரி எம்எல்ஏ எஸ். பி. வெங்கடேஷ்வரன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பிசிஆர் மனோகரன், கஸ்தூரிபா சேவா சங்க தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் புலவர் வேட்ராயன் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி