திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த கவுன்சிலர்கள்
திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
தர்மபுரி ஒன்றியம், திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மீது, வார்டு கவுன்சிலர்கள் 7 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி, கையெழுத்திட்டு, மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம்,தர்மபுரி ஒன்றியம் திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவராக சித்ரா பணியாற்றி வருகிறார். இதில், 12 பேர் வார்டு உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த ஊராட்சியின் தலைவர் சித்ராவின் கணவர் சுப்ரமணியின் தலையீடு அதிகமாக உள்ளது.
இவர், பெண் வார்டு உறுப்பினர்களிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்கிறார்.பொதுமக்களின் அத்தியவாசிய பணிகளை நிறைவேற்ற தடையாக இருக்கிறார். திட்ட பணிகளில், வார்டு உறுப்பினர்களுக்கு எந்த தகவலும் தராமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். தொடர்ந்து பொது மக்களின் புகார்களுக்கு ஆளாகி வருகிறார்.அரசு விதிகளை மீறி ஊராட்சி மன்றத் தலைவர் பணிகளில் கணவரின் தலையீடு இருப்பதால், பெரும்பான்மையாக 7 கவுன்சிலர்கள், இவரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu