தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி.

தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி இன்று வெளியிட்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிக்கயைில், தர்மபுரி மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் தர்மபுரி நகராட்சி மற்றும் பி.மல்லாபுரம், அரூர், கடத்தூர், கம்பைநல்லூர், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஅள்ளி மற்றும் பென்னாகரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் விவரம்:

தர்மபுரி நகராட்சி : ஆண்-23,348 பெண்-24,604 இதரர் -3 மொத்தம்-47,955

அரூர் பேரூராட்சி: ஆண்-11,000 பெண்-12,044 இதரர் -3 மொத்தம்-23,047

கடத்தூர் பேரூராட்சி: ஆண்-4,607 பெண்-4,775இதரர் -3 மொத்தம்-9,385

காரிமங்கலம் பேரூராட்சி: ஆண்-5,354 பெண்-5781 இதரர் -0 மொத்தம்-11135

பாலக்கோடு பேரூராட்சி: ஆண்-8609 பெண்-8823 இதரர் -4 மொத்தம்-17436

பாப்பாரப்ட்டி பேரூராட்சி: ஆண்-5216 பெண்-5372 இதரர் -1 மொத்தம்-10589

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி: ஆண்-4085 பெண்-4371 இதரர் -0 மொத்தம்-8456

பென்னாகரம் பேரூராட்சி: ஆண்-7272 பெண்-7272 இதரர் - மொத்தம்-14544

மாரண்டஅள்ளி பேரூராட்சி: ஆண்-4882 பெண்-5336 இதரர் -0 மொத்தம்-10218

கம்பைநல்லூர் பேரூராட்சி: ஆண்-5207 பெண்-5055 இதரர் -0 மொத்தம்-10262

பி.மல்லாபுரம் பேரூராட்சி: ஆண்-5488 பெண்-5646 இதரர் -0 மொத்தம்-11134

ஆக மொத்தம் - ஆண்-85068 பெண்-89079 இதரர் -14 மொத்தம்-௧௭௪௧௬௧ (1 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகள்)

தர்மபுரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 11 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 26 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 18 மண்டல அலுவலர்கள், 920 வாக்குச்சாவடி அலுவலர்கள், ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் பணிகளை கண்காணிக்க இணை இயக்குநர் / உதவி இயக்குநர் நிலையில் ஒன்றிய பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள தர்மபுரி நகராட்சியில் 13 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பி.மல்லாபுரம், அரூர், கடத்தூர், கம்பைநல்லூர், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஅள்ளி மற்றும் பென்னாகரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் 14 பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 27 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெற உள்ள அனைத்து (230) வாக்குச்சாவடிகளிலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி சி.சி.டி.வி (CCTV) கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் மையம் தருமபுரி அரசுகலைக்கல்லூரியில் அமைக்க தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றது.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்வில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இந்தநிகழ்ச்சியில் தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்கள்) மாரிமுத்துராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஆர்.குருராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்கள்) ஆர்.இரவிச்சந்திரன், 10 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!