தார் கலவை ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் பாதிப்பு: பொதுமக்கள் புகார்

தார் கலவை ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் பாதிப்பு: பொதுமக்கள் புகார்
X

தார் கலவை ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை 

தார் கலவை தயாரிக்கும் போது வெளியேறும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே தர்மபுரி, கோபிநாதம்பட்டி, செம்மண அள்ளி, மொரப்பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அரூர் எச்.அக்ரஹாரம் அருகே தற்காலிகமாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தார் கலவை தயாரிக்கும் இயந்திரம் மூலமாக தார் கலவை தயாரித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தார் கலவை தயாரிக்கும் போது புகை கூண்டு வழியாக வெளியேறும் நச்சுப் புகையில் இருந்து வெளியேறும் ஒரு விதமான வாடையின் காரணமாக அந்தப் பகுதி வாழ் மக்கள் தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்பட்டு உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதேபோன்று அளவுக்கு அதிகமான நச்சு புகைகள் வெளியேறுவதால் அந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் நச்சுப் புகை வெளியேறு வதால் காற்று மாசடைந்து மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து பொது மக்களும், விவசாயிகளும் கூறுகையில், இந்த பகுதியில் தார் கலவை தயாரிப்பதால் சுகாதாரமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நச்சுப் புகையின் காரணமாக பயிரி டப்பட்டுள்ள அனைத்து விவசாய பயிர்களும் நோய் தாக்கு தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதால், மகசூல் குறைந்து விவசாயிகள் பெறும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்

இது குறித்து மாவட்ட நிர்வாகமும், சுற்றுச்சூழல் நிர்வாகமும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings