தர்மபுரியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
அக்டோபர் 21-ம் தேதி ஆண்டுதோறும் காவலர் வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தர்மபுரியில் மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையில் இவ்வாண்டு பணியின் போது உயிரிழந்த 377 வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தங்களை அர்பணித்து மக்களைப் பாதுகாப்பதற்காக இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவலா் நினைவு தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மலா்வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் விதமாகவும் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 72 குண்டுகள் முழங்க காவல் சேக கீதத்துடன் வீர வணக்க நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அண்ணாமலை, புஷ்பராஜ், குணசேகரன், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சௌந்தரராஜன், கருணாகரன், தர்மபுரி இன்ஸ்பெக்டர் சரவணன், தர்மபுரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி, தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக உதவி ஆய்வாளர் சுந்தரம் உள்ளிட்ட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu