தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்ம சாவு போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்ம சாவு போலீசார் விசாரணை
X

பைல் படம்

தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்மமான முறையில் இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தர்மபுரி அடுத்த சின்ன குப்பு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை வயது, 32. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சீதா இவர்களுக்கு கீர்த்தி ஸ்ரீ (வயது 5) சமீரா (3 மாதம்) இரண்டு பெண் பிள்ளைகள் .

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சீதா இரண்டாவது பெண் குழந்தை சமீராவுக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்த பிறகு தூங்கி விட்டார்.

பிறகு நேற்று அதிகாலை பார்த்தபோது பெண் சிசு உடம்பு ஜில்லென்றும், மூக்கு வாயில் நுரை வந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை பார்த்து, அண்ணாமலை அவரது மனைவி சீதாவை எழுப்பி அவர்களது ஆட்டோ மூலம் பெண் சிசு வை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், பெண் சிசு இறந்து விட்டதாக கூறியுள்ளார் .இது குறித்து அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் தர்மபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!