மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை

மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை
X

தர்மபுரி அதியமான்கோட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பா.ம.க.எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.

மின் வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என, பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை துணை மின்நிலையத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மழை, வெயில் என்று பார்க்காமல், கொரானா காலத்தில் பணியாற்றி வரும் மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

அதேபோல கொரானா நோய் தொற்றால் உயிரிழந்த மின்வாரிய பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உளள பணியிடங்களை, உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் இந்திராணி, உதவி பொறியாளர்கள் பசுபதி, ஸ்ரீதர், கவிதா, பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!