தர்மபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு

தர்மபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு
X

தருமபுரி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா வழங்கினார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா தலைமையில் இன்று (18.10.2021) நடைபெற்றது.

இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளைக்கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, புதிய மின் இணைப்பு வசதி, பட்டா வேண்டுதல், தரைமட்ட பாலம், முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 358 மனுக்கள் வரப்பெற்றன.

இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு தலா ரூ.4,871/- வீதம் ரூ.77,936 /- மதிப்பிலான இலவச சலவைப்பெட்டிகளையும், பென்னாகரம் வட்டம் ஊட்டமலை கிராமத்தைச் சேர்ந்த 33 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவசசேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அ.அய்யப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?