தொப்பூர் அருகே ரூ.4 இலட்சம் மதிப்பிலான அரை டன் குட்கா பறிமுதல்

தொப்பூர் அருகே ரூ.4 இலட்சம் மதிப்பிலான அரை டன் குட்கா பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா.

தொப்பூர் அருகே ரூ.4 இலட்சம் மதிப்பிலான அரை டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு டெல்லியில் இருந்து மதுரைக்கு ரயில்வே தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த லாரி பாளையம் புதூர் அருகே செல்லும் போது பின்னால் தேங்காய் ஏற்றி வந்த பிக்கப்வேன் அதி வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பிக்கப் வேனில் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான அரை டன் குட்கா மற்றும் பிக்கப் வேனை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture