தர்மபுரி அருகே கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

தர்மபுரி அருகே கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
X
தர்மபுரி அருகே கஞ்சா விற்பனை செய்த புகாரில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் காவல் உதவி ஆய்வாளர் மாதேசன் மற்றும் போலீசார், தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள பாகல் பட்டி பிரிவு சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, கெட்டுபட்டி அனுமந்தநகர் பகுதியை சேர்ந்த காவேரி மகன் அசோக்குமார் வயது 20.மற்றும் அதே பகுதியை சேர்ந்த சித்தையன் மகன் சத்துரு வயது 19.ஆகிய இருவரும், சுமார் 420 கிராம் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை மேலும் விசாரணை செய்ததில், இன்டூர் அடுத்த கும்பலபாடி யில் சின்னராஜ் வயது 60.என்பவரிடம் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இதைனையடுத்து, மூன்று பேரை தொப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!