தருமபுரி மாவட்டம் கோட்டை பரவாசுதேவர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

தருமபுரி மாவட்டம் கோட்டை பரவாசுதேவர் கோவிலில்   சொர்க்க வாசல் திறப்பு
X

தருமபுரி மாவட்டம் கோட்டை பரவாசுதேவர்  கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் கோட்டை பரவாசுதேவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாைவையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் நகர் கோட்டை கோயில் வரலட்சுமி உடனமர் பரவாசுதேவர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி அதிகாலை 4:30 மணி அளவில் பரவாசுதேவசுவாமி பரமபதவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பரமபத வாசல் திறந்தவுடன் பொதுமக்கள் கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டு சென்றனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்ய செய்த பிறகு கோவிலினுள் அனுமதித்தனர். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலில் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!