பணியின்போது இறந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதியுதவி

பணியின்போது இறந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதியுதவி
X

சாலை விபத்தில் மரணமடைந்த காவலர் ராஜ்குமார் குடும்பத்தாருக்கு 2011 பேட்ச் காவலர்கள் வழங்கிய நிதிஉதவியினை தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன் வழங்கினார்  

சாலை விபத்தில் மரணமடைந்த மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ராஜ்குமார் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடந்த 30.9.2021 மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் ராஜ்குமார் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள 2011 பேட்ச் காவலர்கள் ஒன்றிணைந்து ராஜ்குமார் குடும்பத்திற்கு ரூ.2,45,5102/- நிதியுதவி சேர்த்தனர்.

அவருடைய மனைவி தமிழ்ச்செல்வியிடம் தர்மபுரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் ஐபிஎஸ் வழங்கினார். அப்போது 2011 பேட்ச்சில் பணியில் சேர்ந்த காவலர்கள் உடனிருந்தனர்.

பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன் கிஷோர் (10) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மறைந்த ராஜ்குமார் அவர்களின் மனைவி தமிழ்ச்செல்வி ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம்) உதவித்தொகை வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!