காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கொடுமை: எஸ்பி., அலுவலகத்தில் பெண் புகாா்

காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கொடுமை: எஸ்பி., அலுவலகத்தில் பெண் புகாா்
X

எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நிவேதா.

காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கேட்டு வன்கொடுமை செய்வதாக காவலா் மீது தருமபுாி எஸ்.பி., அலுவலகத்தில் பெண் புகாரளித்துள்ளார்.

தருமபுாி அடுத்த சோளக்கொட்டாய் பகுதியை சோ்ந்தவா் நிவேதா. இவா் அரசு கலைக்கல்லூாியில் எம்.எஸ்.சி., பயிலும் போது குமாரம்பட்டியை சோ்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து கடந்த 2019ம் ஆண்டு இரு வீட்டாாின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில் அவருக்கு புதுடெல்லியில் உள்ள திகார் சிறையில் தமிழ்நாடு காவல் 8வது பட்டாலியனில் காவல் துறையில் பணிபுாிந்து வருகிறாா். திருமணம் செய்துகொண்ட ஒரு சில நாட்களிலேயே என்னை விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

நான் என் மாமியாா் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் மாமியாா் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்து வருவதாகவும் தன் கணவா் தன்னிடம் வாழமால் அம்மாவின் பேச்சை கேட்டு தன்னை துன்புறுத்துவதாகவும். அடிக்கடி வரதட்சணை கொடுமை செய்து வருவதாகவும் தன் திருமணத்தின் போது 33 சவரன் நகை மற்றும் ஆயிரம் கணக்கில் செலவு செய்த பின்பும் தற்போது காா் மற்றும் பணம் வேண்டும் என கொடுமை செய்து வருவதாகவும் தொிவித்தாா்.

என்னை கொலை செய்யும் நோக்கில் உணவில் விஷம் கலந்து மாமியாா் கொடுமை செய்ததால் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றபோது என்னை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதித்து காப்பாற்றினர்.

மேலும் கணவருக்கு பல பெண்களுடன் தொடா்பு உள்ளதாகவும், விக்னேஷ் நண்பர்கள் அவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் மனமுடைந்து தற்போது தன்னுடைய அம்மா வீட்டில் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், மாமியாா் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தாா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!