தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா
X

கலாம் இந்தியா அறக்கட்டளை சார்பில் டாக்டர் அப்துல்கலாம் 90-வது பிறந்த நாள் விழா தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் 90-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கலாம் இந்தியா அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் 90-வது பிறந்த நாள் விழா தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை அமைப்பாளர் அமுதவாணன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தர்மபுரி- பாப்பாரப்பட்டி மெயின் ரோட்டில் பசுமை கிராமம் திட்டத்தின் கீழ் 90 மரக்கன்றுகளை நட்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் சித்தார்த்தன், தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் அருண்குமார், சதீஷ், கிஷோர், சிவசஞ்சய், சிவாநவீன், சேகர், பாவேந்தன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture