தருமபுரி நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு

தருமபுரி நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு
X

தர்மபுரி நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார்

தருமபுரி நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

தருமபுரி மாவட்டத்தில், நகரபுற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக,அதிமுக வார்டு உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உள்ள உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில் வெற்றிபெற்று புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா இன்று நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

இதில் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக கூட்டணி 19 இடங்களிலும், அதிமுக 13 இடங்களிலும் சுயேட்சை உறுப்பினர் 1 இடத்திலும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து இன்று தருமபுரி நகராட்சியில் ஆணையாளரும், தேர்தல் அலுவலருமான சித்ரா சுகுமார் வழிமொழிய இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டும்,வாக்ளித்த மக்களுக்கு நன்றி கூறியும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!