தர்மபுரி அரசு கல்லூரி உடற்கல்வி பேராசிரியருக்கு கல்வி தமிழ் வேந்தர் விருது

தர்மபுரி அரசு கல்லூரி உடற்கல்வி பேராசிரியருக்கு கல்வி தமிழ் வேந்தர் விருது
X

கல்வி தமிழ் வேந்தர் விருது பெற்ற பேராசிரியர் பாலமுருகனை தர்மபுரி அரசுக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் பாராட்டினார்.

தர்மபுரி அரசு கல்லூரி உடற் கல்வி பேராசிரியருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கல்வி தமிழ் வேந்தர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக முனைவர் பாலமுருகன் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே பல்வேறு துறைகளில் சேவையாற்றியதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் பசுமை வாசல் பவுண்டேஷன் திண்டுக்கல் அக்னி பெண்கள் தமிழ் சங்கம், தமிழ்நாடு வீரமங்கை சமூக சிந்தனை அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி, கம்பர் இளைஞர் நற்பணி சங்கம் கிருஷ்ணகிரி ஆகிய அமைப்புகள் இணைந்து செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தின சிறப்பு விருதுகள் -2021 நிகழ்ச்சியில் கல்வி தமிழ் வேந்தர் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

கடந்த 24 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையிலும், பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும், மாணவர்கள் நலன் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளிலும்,மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் வாழ்விற்கு வழிகாட்டியாகவும், கொரோனா தீ நுண்ணுயிரி காலத்தில் மாணவ, மாணவிகளுக்கும்,பொதுமக்களுக்கும் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியமையை பாராட்டி இவருக்கு கல்வி தமிழ் வேந்தர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

விருது பெற்ற உடற்கல்வி இயக்குனர் பாலமுருகனை கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.கி.கிள்ளிவளவன் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture