தர்மபுரி மாவட்டத்தில் இன்று 102 பேருக்கு பெருந்தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 102 பேருக்கு பெருந்தொற்று
X
தர்மபுரி மாவட்டத்தில் இன்று கொரோனோவுக்கு ஒருவர் பலியான நிலையில், 102 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று, 102 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம், 23 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 22 ஆயிரத்து 598 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்தில் இன்று ஒரே நாளில் மட்டும், 193 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 951பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று கொரோனோவால் ஒருவர் உயிரிழந்துள்ளதையும் சேர்த்து, மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 193பேர் என்று உயர்ந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!