தர்மபுரி மாவட்ட 56வது ஆண்டு தினம்: அதியமான் அவ்வையார் சிலைகளுக்கு எம்எல்ஏ மரியாதை

தர்மபுரி மாவட்ட 56வது ஆண்டு தினம்: அதியமான் அவ்வையார் சிலைகளுக்கு எம்எல்ஏ மரியாதை
X

அதியமான் அவ்வையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ வெங்கடேஸ்வரன்.

தர்மபுரி மாவட்டம் உதயமாகி 56வது ஆண்டு தினத்தையொட்டி, அதியமான் அவ்வையார் சிலைகளுக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தர்மபுரி மாவட்டம் 1965ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி ஜெயந்தி அன்று சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அக்டோபர் 2 -ம் நாளை தர்மபுரி மாவட்ட மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் .

இன்று பா.ம.க. தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அமைந்துள்ள, அதியமான் -அவ்வையார் சிலைக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டத்தின் 56வது ஆண்டு உதயமான நாள் நினைவாக அதியமான் கோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
2025 ஆம் ஆண்டில் ஏர்போட்ஸ் ப்ரோ 3வது தலைமுறைக்கான ஆப்பிள் அறிமுகப்படுத்துமா...? ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது....!