தர்மபுரியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

தர்மபுரியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
X
தர்மபுரியில் பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி குமாரசாமிபேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் குயிலன் இவரது மனைவி லதா(48). இவர் நேற்று மாலை 7 மணியளவில் குமாரசாமிபேட்டை தட்சிணாமூர்த்தி தெரு மடம் அருகே பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிராக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவரின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் செயினை கெட்டியாக பிடித்து கொண்டதால் அவர்களால் பறிக்க முடியவில்லை. இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து அதிவேகமாக பைக்கில் தப்பினர். அவர்கள் இழுத்ததில் லதா கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து லதா தர்மபுரி டவுண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் லதா சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபடும் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!